நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் குஜராத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு தடுப்பூசி வழங்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா அதிகரிக்கும் மாநிலங்கள் பல பகுதி நேர, முழு நேர ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், குஜராத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி இன்று முதல் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு இன்று அமலாகிறது என அறிவித்துள்ளார். இந்த இரவு நேர ஊரடங்கு இம்மாத இறுதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அரசு அலுவலகங்கள் 30 ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.
இதேபோல திருமணம் போன்ற விஷேசங்களை ஒத்தி வைக்கும்படியும் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.