Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தானிலிருந்து வந்த இஸ்லாமிய பெண்ணுக்கு குடியுரிமை!

பாகிஸ்தானிலிருந்து வந்த இஸ்லாமிய பெண்ணுக்கு குடியுரிமை!
, வியாழன், 19 டிசம்பர் 2019 (17:58 IST)
குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தானுக்கு திருமணம் ஆகி சென்ற பெண்ணுக்கு மீண்டும் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் குஜராத்தில் ஆச்சர்யகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர் ஹசீனா பென். இவர் 1999ல் தனக்கு திருமணமான பின்னர் பாகிஸ்தானில் வசித்து வந்தார்.

கணவன் இறந்ததால் கடந்த வருடம் குஜராத் திரும்பிய ஹசீனா குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளார். அவரது ஆவணங்களை சரிபார்த்த பின்னர் அவருக்கு இந்திய குடியுரிமைக்கான சான்றிதழை துவாராக மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார்.

குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதாக உள்ளது என பலர் போராடி வரும் நிலையில், இஸ்லாமிய பெண் ஒருவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈபிஎஸ் - ஓபிஎஸ்-க்கு மிரட்டல் விடுத்தது யார் தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிருவீங்க...