அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வருவதையொட்டி குஜராத்தில் குடிசைவாசி மக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்றுவதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிப்ரவரி 24ம் தேதி இந்தியா வர இருக்கிறார். அவர் குஜராத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட இருப்பதால் குஜராத்தில் பாதுகாப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
குஜராத்தில் உள்ள படேல் விமான நிலையம் அருகே சேரி பகுதிகளை மறைக்கும் விதமாக 7 அடி உயரத்திற்கு சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் மொரோடோ குடிசைப்பகுதியில் உள்ள மக்களை அகமதாபாத் நகராட்சி வெளியேறுமாறு நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மக்கள் மறுத்தாலும் விடாப்பிடியாக அதிகாரிகள் அவர்களை வெளியேற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு சில சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.