Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் தேர்தல்: 89 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

Webdunia
சனி, 9 டிசம்பர் 2017 (08:47 IST)
குஜராத் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் திட்டமிட்டபடி இன்று காலை சற்றுமுன்னர் வாக்குப்பதிவு தொடங்கியது

இன்று முதல்கட்டமாக 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வரும் 14ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் தேர்தல் முடிவுகள் டிச.18ம் தேதி வெளியாகிறது. இந்த தேர்தலில் தங்கள் கட்சிக்கே வெற்றி கிடைக்கும் என்று பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்தி நம்பிக்கை.தெரிவித்துள்ளனர்.

இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் ஜாம்நகர் ஊரக தொகுதியில் அதிகபட்சமாக 27 வேட்பாளர்களும், ஜகாடியா, காண்டேவி தொகுதிகளில் குறைந்தபட்சமாக தலா 3 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். மேலும் குஜராத் தேர்தலில் முதல் முறையாக அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களிலும் வாக்களித்தது தொடர்பான ஒப்புகைச் சீட்டு வழங்கப்படுகிறது.

குஜராத் தேர்தல் களத்தில் முதல் கட்ட தேர்தலில் 977 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 24,689 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.  இன்று மட்டும் 2.12 கோடி பேர் முதல் கட்ட தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments