குஜராத்தில் நேற்று மோர்பி ஆற்றங்கரையில் கட்டப்பட்ட தொங்கு பாலம் திடீரென விழுந்து விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள தொங்கு பாலத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தியதால் எடை தாங்க முடியாமல் அறுந்து விழுந்தது
இந்த நிலையில் ஆற்றுக்குள் விழுந்தவர்களை மீட்க மாநில மற்றும் மத்திய பேரிடர் மீட்பு படை விரைந்தது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும் இன்னும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்தில் பாலத்தை புதுப்பித்த கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது