Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் சட்டப்பேரவை தேர்தல்: ஆம் ஆத்மி கட்சி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (15:46 IST)
குஜராத் மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்பு நேற்று வெளியானது என்பதும், அம்மாநிலத்திற்கு டிசம்பர் 1ஆம் தேதி மற்றும் 5ஆம் தேதி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது என்பதும் தெரிந்ததே. மேலும் டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன
 
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய மும்முனைப் போட்டி இருக்கும் நிலையில் மூன்று கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன
 
தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் ஆட்சியை பிடிக்க தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது
 
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக இசுதன் காத்வி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments