Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

70க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு!

Advertiesment
70க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு!
, வெள்ளி, 10 நவம்பர் 2017 (14:13 IST)
அசாம் மாநில கவுகாத்தியில் இன்று ஐஎஸ்டி கவுன்சில் கூட்டம்  நடைபெற்று வருகிறது. இதில் 70க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.


 

 
ஜவுளி மற்றும் ஜவுளி பொருட்களின் மீதான 18% வரி, 5% வரியாக குறைக்கப்பட்டுள்ளது. செங்கல் தொழில் தொடர்பான சில்லறை வேலைகள் மீதான வரி குறைக்கபட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சத்துமாவிற்கு 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. 
 
விவசாய டிராக்டருக்கான சில பிரத்யேக பாகங்கள் மீதான வரி 28% வரியிலிருந்து 18% வரியாக குறைக்கப்பட்டுள்ளது. விளைபொருட்கள் சேமிப்புக்கு உள்கட்டமைப்பு அமைப்பது குறித்த ஒப்பந்த பணிகள் மீதான வரி 12%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
 
58 இனங்களின் பொருட்கள் மீதான வரியை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 28% வரி விதிக்கப்பட்டுள்ள 228 வகையான பொருட்கள் மீதான வரியை குறைக்க மறுசீராய்வு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வோடபோனின் ரெட் ஆஃபர்: ஜியோ டெட்....