Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமண ஊர்வலத்தில் டான்ஸ் ஆடிய மணமகன் மாரடைப்பால் மரணம்

Advertiesment
, சனி, 13 மே 2017 (07:38 IST)
குஜராத் மாநிலத்தில் திருமணம் நடைபெறுவதற்கு ஒருசில நிமிடங்களுக்கு முன்பு மணமகன் மாரடைப்பால் மரணம் அடைந்த சோக சம்பவம் ஒன்று நடந்துள்ளது.





குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள ரனோலி கிராமத்தைச் சேர்ந்தவர் சோலங்கி. இவருக்கு கடந்த புதன்கிழமை திருமணம் நடைபெற இருந்தது.

திருமணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன் மணமகனை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது திருமண உற்சாகத்தில் மணமகனின் நண்பர்கள் ஊர்வலத்தில் டான்ஸ் ஆட, மணமகனும் உற்சாகத்தில் அவர்களுடன் நடனம் ஆடினார். ஒரு நண்பர் மணமகனை தோளில் தூக்கி வைத்து ஆடிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மணமகன் சோலங்கிக்கு மாரடைப்பு ஏற்பட்டு நண்பரின் தோளிலேயே சாய்ந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மணமகன் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திவிட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரேசன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா? இந்த சான்ஸை மிஸ் செய்யாதீங்க!