Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயநாடு நிலச்சரிவு: தாமாக முன்வந்து விசாரணை செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு

Mahendran
செவ்வாய், 30 ஜூலை 2024 (14:44 IST)
வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் இது குறித்து தாமாக முன்வந்து விசாரணை செய்ய தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த  உடல்கள் ஆறுகளில் மிதந்து வருவதாகவும் அந்த உடல்கள் மீட்கப்பட்டு வருவதாகவும் 500 வீடுகளில் குடியிருந்த சுமார் 1000 பேர் இந்த நிலச்சரிவில் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது .

ந்த நிலையில் நிலச்சரிவு குறித்து தாமாக முன்வந்து விசாரணை செய்ய தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விரைவில் பட்டியலிட பதிவாளருக்கு உத்தரவு விடப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

மேலும் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள சுரங்கம், குவாரிகள், சாலை கட்டுமான திட்ட விவரங்களை உடனடியாக தர வேண்டும் என்றும் தீர்ப்பாயம் அறிவுறுத்தி உள்ளது. இந்த விவகாரங்களை தயார் செய்து விரைவில் வழங்குமாறு கேரளா அரசு வழக்கறிஞருக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் வலியுறுத்தி உள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments