Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 நாட்களில் வீட்டைக் காலி செய்ய வேண்டும் – சந்திர பாபு நாயுடுவுக்கு அடுத்த நெருக்கடி !

Webdunia
ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (08:57 IST)
அமராவதி பகுதியில் தான் வசித்து வந்த வீட்டில் இருந்து ஒரு வாரத்தில் காலி செய்ய வேண்டும் என ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்தபோது உண்ட வல்லி எனும் இடத்தில் ரமேஷ் என் பவருக்கு சொந்தமான 1.3 ஏக்கர் பரப்பளவில் இருந்த பங்களா ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கினார். நீச்சல்குள வசதியுடன் கூடிய சொகுசு பங்களாவான அந்த வீடு கிருஷ்ணா நதியோரம் அமைந்திருந்தது.

இந்த வீட்டின் அருகே அரசு செலவில் ‘பிரஜா வேதிகா’ எனும் கட்டிடத்தை கட்டி மக்கள் குறை கேட்கும் மையமாகப் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெகன் மோகன் முதல்வரான பின் அந்த வீடு சட்ட வரம்புகளை மீறி கட்டப்பட்டதாகக் கூறி குற்றம் சாட்டப் பட்டது. இதையடுத்து பிரஜா வேதிகா என்ற அந்த கட்டிடம் சமீபத்தில் இடிக்கப்பட்டது.

இதையடுத்து சந்திரபாபு நாயுடு வசித்து வந்த வீட்டை ஒரு வாரத்தில் காலி செய்ய வேண்டும் இல்லையெனில் அரசே அந்த வீட்டை இடித்துவிடும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் இன்னும் 3 நாட்களுக்குள் அந்த வீட்டைக் காலி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.. ரூ.70 முதல் ரூ.395 அதிகம் என தகவல்..!

விஜய் பேசுவதை கண்டுகொள்ளாதீர்.. தொண்டர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல்..!

உலகிலேயே மிக சுவையான பீர்! இந்திய பீர் வகைக்கு கிடைத்த உலகளாவிய விருது!

மது போதையில் நடனமாட சொன்ன மணமகன் நண்பர்கள்: மணமகள் எடுத்த அதிர்ச்சி முடிவு..!

கமலா ஹாரிஸின் பாதுகாப்பு திடீர் ரத்து: அமெரிக்க ரகசிய சேவை விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments