புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய்களுக்கான மருந்து விலையை 70% வரை குறைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
ஆம், புற்றுநோய், நீரிழிவு மற்றும் இருதய நோய்களுக்கான சில முக்கியமான மருந்துகளின் விலைகளை கணிசமாகக் குறைக்க ஆகஸ்ட் 15 ஆம் தேதி மத்திய அரசு ஒரு முக்கியமான முடிவை அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நடந்தால், விலைக் குறைப்பு 70% வரை இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில், 41 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் விலை வரம்பு 30 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக, இந்த மருந்துகளின் குறைந்தபட்ச விலை 90 சதவீதம் வரை குறைக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்.
பல்வேறு உயிர் காக்கும் மருந்துகளை குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.