நம் நாட்டிலுள்ள நரிக்குரவர் குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், அவரது அமைச்சரவையில் ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், ஹிமாச்சல் தமிழகம், கர்நாடகா, சத்தீஸ்கர் ஆகிய மா நிலங்கள் உள்ள பழங்குடியினப் பட்டியலில் விடுபட்டிருக்கும் சமூகத்தினரை அப்பட்டியலில் சேர்க்க இன்று அனுமதி அளித்துள்ளது. இதனால், பட்டியலின மக்களுக்குக் கிடைக்கும் அனைத்து சலுகைகளும் இனி நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினருக்குக் கிடைக்கும் என அரசு கூறியுள்ளது.
கடந்த மார்ச்சில், , முதல்வர் ஸ்டாலின், நரிக்குறவர், குருவிக்காரர் சமுகத்தினரை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பது நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாக இவர்களையும் பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டுமெனக் கூறி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.