ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மன்னர் போல் செயல்படுகிறார்.! ராகுல் காந்தி விமர்சனம்.!!

Senthil Velan
புதன், 4 செப்டம்பர் 2024 (16:17 IST)
ஜம்மு காஷ்மீர் ஆளுநர் தன்னை ஒரு மன்னர் போல் நினைத்து செயல்படுகிறார்  என காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.  
 
90 தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு  மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் செப்டம்பர் 25 ஆம் தேதி நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  அதன்படி ராம்பனில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர்,   மாநிலங்களின் அதிகாரத்தை பாஜக குறைக்கிறது என்றார்.
 
மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக மாற்ற பாஜக திட்டமிட்டு வருகிறது என்றும்  ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதை காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி உறுதி செய்யும் என்றும் ராகுல் உறுதியளித்தார். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் ., வெறுப்பு, வன்முறை மற்றும் பயத்தை பரப்புவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என தெரிவித்த அவர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 4,000 கிலோமீட்டர் வரை பாதயாத்திரை நடத்தினோம் என்று கூறினார்.  


ALSO READ: பாராலிம்பிக்ஸ் குண்டு எறிதல் போட்டி.! இந்திய வீரர் சச்சின் கிலாரி வெள்ளி வென்று அசத்தல்.!!
 
இங்கு மாநில அந்தஸ்து மட்டும் பறிக்கப்படவில்லை, மக்களின் உரிமைகள், வளங்கள் என அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார். மேலும் ஜம்மு காஷ்மீரில் இன்று மன்னர் ஆட்சி உள்ளது என்றும் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் தன்னை ஒரு மன்னர் போல நினைத்து செயல்படுகிறார் என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அன்னைக்கு சட்டைய கிழிச்சிட்டு நின்னீங்க!.. ரிசல்ட்டுக்கு அப்புறம்!.. பழனிச்சாமி ராக்ஸ்!..

தமிழகத்திற்கு அடுத்தடுத்து வரும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.. நடைப்பயணம், பேரணி நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments