Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆண்டுகளாக 2 ஆயிரம் ருபாய் அச்சடிக்கப்படவில்லை! – மத்திய அமைச்சர் தகவல்!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (08:33 IST)
பணமதிப்பு இழப்பிற்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கடந்த 3 ஆண்டுகளாக அச்சடிக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்ட நிலையில் புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதில் புதிதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அதன் பயன்பாடு மக்களிடம் குறைந்து வருவதால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிப்பதும் குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி ”கடந்த 2018ம் ஆண்டு கணக்குபடி இந்தியாவில் மொத்தம் 336 கோடியே 30 லட்சம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. ஆனால் கடந்த மார்ச் மாத நிலவரப்படி 223 கோடியே 30 லட்சம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. மக்களின் தேவையை பொறுத்தே ரூபாய் நோட்டுகளை எவ்வளவு அச்சடிப்பது என்பதை ரிசர்வ் வங்கி முடிவு செய்கிறது. அதனால் கடந்த 2018-2019 நிதியாண்டிலிருந்தே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments