இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள சுமார் 40,000 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை நாடு கடத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்தியாவில் வசிக்கும் ரோஹிங்கியா அகதிகளில் 14,000 மட்டுமே ஐ.நா.அகதிகள் ஆணையத்திடம் பதிவு செய்த அகதிகளாகயுள்ளனர். ஆனால், சுமார் 40,000 அகதிகள் சட்ட விரோதமாக இந்தியாவில் உள்ளதாக இந்திய அரசு கணக்கிட்டுள்ளது.
1982 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மியான்மர் குடியுரிமைச் சட்டத்தின் படி ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு மியான்மரில் குடியுரிமை மறுக்கப்பட்டது. இதனால், ரோஹிங்கியா முஸ்லிம்கள் பல்வேறு நாடுகளுக்குத் தஞ்சம் கோரி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் ஜம்மு, அசாம், உத்திர பிரதேசம், ஹரியானா, டெல்லி, ஐதராபாத், ராஜஸ்தான், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோஹிங்கியா அகதிகள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.