தேர்தல் நிதியாக பாஜக கார்ப்ரேட் நிறுவனங்களிடம் இருந்து ரூ.741 கோடி வாங்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தேர்தல் வரவு செலவு கணக்குகளை பாஜக தேர்தல் ஆணையத்தில் சமர்பித்துள்ளது. இதில் கடந்த நிதி ஆண்டில் கார்ப்ரேட் நிறுவனங்களிடம் இருந்து ஆன்லைன் மற்றும் காசோலைகள் மூலம் ரூ.741 கோடியை நிதியாக பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதில், ரூ.356 கோடி டாடா நிறுவனத்திடமிருந்தும், ரூ.55 கோடி புரூடெண்ட் அறக்கட்டளையிடமிருந்தும் பெற்றுள்ளது என கணக்கு காட்டியுள்ளது. 75% பாஜக தேர்தல் நிதி கார்ப்ரேட் நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல ரூ.26 கோடியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் நிதி கடந்த நிதி ஆண்டில் ரூ.146 கோடியாக உயர்ந்திருப்பதும் கவனிக்க பட வேண்டிய ஒன்றாக உள்ளது.