Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகம் முழுவதும் திடீரென முடங்கிய யூடியூப் இணையதளம்.. பயனர்கள் அதிர்ச்சி..!

Webdunia
வியாழன், 23 மார்ச் 2023 (14:05 IST)
உலகம் முழுவதும் கடந்த சில மணி நேரங்களாக யூடியூப் இணையதள சேவை முடங்கியுள்ளதால் பயனர்கள் கடும் அவதியில் உள்ளனர். கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளான யூடியூப், ஜிமெயில், கூகுள் டிரைவ், கூகுள் அனாலிடிக்ஸ் ஆகியவை கடந்த சில மணி நேரங்களாக முடங்கி இருப்பதால் அந்த சேவையை பயன்படுத்தும் கோடிக்கணக்கான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் கூகுள் நிறுவனத்தின் இந்த சேவைகள் முடங்கி உள்ளதாகவும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியுள்ள நிலையில் இந்த தொழில்நுட்ப கோளாறுகள் தற்போது சரி செய்யப்பட்டு படிப்படியாக இயங்கி வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இன்று காலையில் இருந்தே கூகுள் நிறுவனத்தின் முக்கிய சேவைகள் முடங்கியதை அடுத்து இது குறித்து பயனர்கள் தங்களுடைய அதிருப்தியை டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். கூகுள் நிறுவனம் மட்டுமின்றி பல நிறுவனத்தின் சேவைகள் எல்லாம் முடங்கி உள்ளதாகவும் இந்த இவை அனைத்திற்கும் தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என்று கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஒரு கோட் நம்பர்.. மொத்த பணத்தையும் இழந்த இளம்பெண்.. நூதன மோசடி..!

ஆட்சியிலும் பங்கும், அதிகாரத்திலும் பங்கு: திமுகவுக்கு செக் வைக்கிறாரா திருமாவளவன்?

வெங்காயம் ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலை ரத்து.! மத்திய அரசு அறிவிப்பு...!

மாணவியை மது விருந்துக்கு அழைத்த கல்லூரி பேராசிரியர்கள்.! நெல்லையில் அதிர்ச்சி..!!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.! ரூ.55 ஆயிரத்தை நெருங்குவதால் அதிர்ச்சி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments