விக்கிற விலைவாசியில… 3 இலவச சிலிண்டர்கள்! – கோவா அரசு அசத்தல் அறிவிப்பு!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (08:13 IST)
கோவாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக வென்ற நிலையில் ஆண்டுதோறும் 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவாவில் பாஜக ஆட்சியை பிடித்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் பாஜக தெரிவித்திருந்தது.

அதன்படி தற்போது பாஜக மீண்டும் ஆட்சியமைத்த நிலையில் முதல் சட்டமன்ற கூட்டம் முதலமைச்சர் ப்ரமோத் சாவந்த் தலைமையில் நடைபெற்றது. அதன்பின் ட்விட்டரில் பதிவிட்ட அவர் “எங்கள் தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தபடி, புதிய நிதியாண்டில் இருந்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 3 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது என மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments