Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பகவான் ராமருக்கு உயர்சாதியினரா உதவினர்? – கோவா ஆளுனர் சர்ச்சை கேள்வி!

பகவான் ராமருக்கு உயர்சாதியினரா உதவினர்? – கோவா ஆளுனர் சர்ச்சை கேள்வி!
, வெள்ளி, 22 நவம்பர் 2019 (12:45 IST)
ராமர் வனவாசம் சென்றபோது உயர்சாதியினர் அவருக்கு உதவவில்லை என கோவா அளுனர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் ஆளுனராக இருந்து வந்த சத்யபால் மாலிக் கடந்த மாதம் கோவா ஆளுனநராக மாற்றப்பட்டார். கோவாவில் உள்ள பழங்குடியின மாணவர்கள் கலந்து கொண்ட விழா ஒன்றில் ராமாயணம் பற்றி பேசியுள்ளார் ஆளுனர்.

அப்போது அவர் “அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட கோவில் கட்டுவது தொடர்பாக பலர் ஆலோசனைகள் செய்து வருகின்றனர். அதற்கு நிதி திரட்டுவதற்கும் பலர் தயாராய் உள்ளனர். அவர்கள் யார் பேசினாலும் ராமர் மற்றும் ராமரின் அரசாட்சி பற்றி மட்டுமே பேசுகிறார்கள்.

ஆனால் கடவுளாக வணங்கப்படும் ராமர் அன்று காட்டில் தன் துணைவியார் சீதையுடன் வனவாசம் இருந்தபோது அவருக்கு எந்த உயர்சாதியினரும் உதவவில்லை. சீதையை ராவணன் இலங்கைக்கு கடத்தி சென்றபோது ராமருக்கு உதவியவர்கள் பழங்குடியின மக்கள்தான். உயர்சாதியினர் உதவினார்கள் என என்னிடம் யாராவது விளக்க முடியுமா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் ”அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டினால் அதில் அவருக்கு உதவிய பழங்குடியினரையும் சித்தரிக்க வேண்டும் என கடிதம் எழுத உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எங்களை திருநங்கைகளாக அறிவித்துவிடுங்கள்: நாராயணசாமி ஆதங்கத்தின் காரணம் என்ன?