Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடுவானில் திவாலான விமானங்கள்.. அவசரமாக தரையிறக்கம்! – மும்பை பயணிகள் அதிர்ச்சி!

Go First
, புதன், 3 மே 2023 (09:58 IST)
இந்தியாவில் உள்நாட்டு, பன்னாட்டு விமான சேவைகளில் ஈடுபட்டு வரும் Go First விமான நிறுவனம் திடீரென திவாலான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய விமானப் போக்குவரத்தில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் 5வது இடத்தில் உள்ள விமான நிறுவனம் Go First விமான நிறுவனம். இந்நிறுவனத்தின் விமானங்கள் பல உள்நாட்டு விமான போக்குவரத்தில் உள்ளன. இந்நிலையில் இன்று Go First நிறுவனம் திவாலாகிவிட்டதாக திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திவால் அறிவிப்பை Go First நிறுவனம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் வழங்கியுள்ள நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு Go First விமானங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே ஸ்ரீ நகர் மற்றும் டெல்லியிலிருந்து புறப்பட்டு மும்பை சென்றுக் கொண்டிருந்த இரண்டு Go First நிறுவன விமானங்கள் உடனடியாக சூரத்திற்கு திருப்பிவிடப்பட்டு அங்கு நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

பின்னர் விமானங்கள் திருப்பி விடப்பட்டதற்கான காரணங்கள் சரியாக இல்லை என்று கூறி விமானங்கள் மீண்டும் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மழையெல்லாம் முக்கியமில்ல.. ‘தல’தான் முக்கியம்! – சிஎஸ்கே டிக்கெட்டுகளுக்காக காத்து கிடக்கும் ரசிகர்கள்!