Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோ பேக் மோடி…புனேவில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்கள்!

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (13:34 IST)
பல்வேறு வளர்ச்சி திட்டம் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட   நாளை  மாகாராஷ்டிர மாநிலம் புனேவுக்கு வருகை தரவுள்ள பிரதமர் மோடிக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியில்  பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.  இந்த நிலையில் புனேவில் உள்ள தக்துசேத் கோவிலில் நாளை  சாமி தரிசனம்  மற்றும் பூஜை செய்யவுள்ளார்.

புனேவில்  நாளை காலை 11:45 மணியளவில் நடக்கும் விருது விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அவருக்கு லோக்மான்யா திலக் தேசிய விருது வழங்கப்படுகிறது.  தேசிய சேவையாற்றுபவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும்  நிலையில் இதன் 41 வது விருதை பிரதமர் மோடி பெறவுள்ளார்.

இந்த நிலையில்,  நாளை பிரதமர் மோடி புனேவுக்கு செல்லவுள்ள நிலையில், புனே நகர இளைஞர் காங்கிரஸ்  நகரம் முழுவதும் சாலையோரம்  பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்லுங்கள். நாடாளுமன்றத்தை எதிர்க்கொள்ளுங்கள் என்று கூறி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
மணிப்பூர் விவகாரம்  நாட்டில் பற்றி எரியும்போது, ஏன் விழாக்களில் கலந்துகொள்ள வேண்டும் என அந்தப் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

7000 mAh பவர் பேட்டரி.. வாடிக்கையான அம்சங்கள்..! - OPPO K13 5G எப்படி?

அடுத்த 5 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்: வெய்யில் கொளுத்தும்: வானிலை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments