Publish Date: Sun, 14 Feb 2021 (09:11 IST)
Updated Date: Sun, 14 Feb 2021 (09:13 IST)
பிரதமர் மோடி இன்று தமிழகம் வரும் நிலையில் அவர் வருகை குறித்த ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்டாக தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். இதற்காக போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி முன்னதாக சிலமுறை தமிழகம் வந்தபோது ட்ரெண்ட் செய்யப்பட்ட #GoBackModi ஹேஷ்டேக் மீண்டும் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு எதிராக மோடியை வரவேற்கும் ஹேஷ்டேகை மோடி ஆதரவாளர்கள் ட்ரெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர். அதன்படி #TNWelcomesModi என்ற ஹேஷ்டேகும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதனால் இந்த இரு ஹேஷ்டேகுகளையும் ட்ரெண்ட் செய்வதில் இரண்டு தரப்பினரிடையே ட்விட்டரில் போட்டி எழுந்துள்ளது.