Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுபான விற்பனையை அதிகரிக்க பெண்கள் பெயர் சூட்டுங்கள்; பாஜக அமைச்சர் சர்ச்சை கருத்து

Advertiesment
மதுபான விற்பனையை அதிகரிக்க பெண்கள் பெயர் சூட்டுங்கள்; பாஜக அமைச்சர் சர்ச்சை கருத்து
, திங்கள், 6 நவம்பர் 2017 (16:16 IST)
மதுபானங்களின் விற்பனையை அதிகரிக்க பெண்களின் பெயர்களை சூட்டுங்கள் என பாஜக அமைச்சர் கிரிஷ் மஹாஜன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
 
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் கிரிஷ் மஹாஜன் நீர்பாசனத் துறை அமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் மதுபானங்களின் விற்பனையை அதிகரிக்க ஐடியா கொடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய கிரிஷ், மதுபானங்களின் விற்பனையை அதிகரிக்க பெண்களின் பெயர்களை சூட்டுங்கள் என கூறியுள்ளார். இவர் கூறியது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
 
பாஜகவினர் அடிக்கடி இதுபோன்று சர்ச்சையான கருத்தை கூறிவருவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. கிரிஷ் கூறிய சர்ச்சை கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர் இதையடுத்து நேற்று அவர் தான் பேசியதற்கு மன்னிப்பு கோரினார். 
 
மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கிரிஷ் மஹாஜன் கூறியதாவது:-
 
நான் பெண்கள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். அதற்கு மன்னிப்பும் கோருக்கிறேன். நான் பெண்களை களங்கப்படுத்தும் நோக்கில் அப்படி பேசவில்லை. அது எனது எண்ணமும் இல்லை. யாருடைய மனதையும் புண்படுத்தும் எண்ணத்துடன் பேசவில்லை என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்பலத்தில் ஆடும் அரசின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி!