பெண்கள் கையில் துப்பாக்கி, கத்தி கொடுங்கள்! - சாதிய அமைப்பின் பேச்சால் சர்ச்சை!

Prasanth K
புதன், 27 ஆகஸ்ட் 2025 (12:45 IST)

உத்தர பிரதேசத்தில் நடந்த சாதிய அமைப்பு ஒன்றின் கூட்டத்தில் வன்முறையை தூண்டும்படி பேசியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்தில் நொய்டாவில் பெண் ஒருவர் வரதட்சணைக்கு கொடுமைக்கு உள்ளான நிலையில், குடும்பத்தினரால் தீ வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு, வரதட்சணை கொடுமை உள்ளிட்டவை தொடர்பாக பலரும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

 

இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் பாக்பட் பகுதியில் கேசரியா மகாபஞ்சாயத் நடைபெற்றுள்ளது. அதில் பேசிய சாதிய அமைப்பை சேர்ந்தவர்கள் “மகள்களை திருமணம் செய்து வைக்கும்போது அவர்களுக்கு தங்கமோ, வெள்ளியோ அல்லது பணமோ தராமல் துப்பாக்கி, வாள் அல்லது கத்தி போன்ற ஆயுதங்களை கொடுங்கள். அதன்மூலம் அவர்கள் தங்களை தற்காத்துக் கொள்வார்கள்.

 

காவல்துறைக்கு பயந்து இருப்பதால் பெண்களால் ராணி லக்‌ஷ்மிபாய் போல தங்களை தைரியமாக தற்காத்துக் கொள்ள முடியவில்லை” என்று பேசியுள்ளனர். இந்த பேச்சு வன்முறையை ஊக்கும் விக்கும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments