சிறுமிகள் பலாத்காரம்! ரயிலை மறித்து போராடிய மக்கள் மீது தடியடி தாக்குதல்! - பத்லாபூரில் அதிர்ச்சி சம்பவம்!

Prasanth Karthick
புதன், 21 ஆகஸ்ட் 2024 (08:47 IST)

சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

வங்கதேசத்தில் பெண் பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பள்ளியில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள பத்லாபூரில் உள்ள பள்ளி ஒன்றில் இரு சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. இந்த வழக்கில் பள்ளி பணியாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பத்லாபூர் முழுவதும் பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. 
 

ALSO READ: போரை நிறுத்த சம்மதம் தெரிவித்த இஸ்ரேல்.. மறுத்த ஹமாஸ்? ஏமாற்றத்துடன் திரும்பிய அமெரிக்கா!
 

இந்த பந்த் போராட்டத்தின்போது உள்ளூர் மக்கள் அப்பகுதி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு எழுந்தது. இதனால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதுடன், ரயில்களும் வந்த வழியே திருப்பி விடப்பட்டன. ரயில் பாதையிலிருந்து போராட்டக்காரர்களை வெளியேற்ற போலீஸார் முயன்றபோது மோதல் ஏற்பட்டது. இதனால் போலீஸார் தடியடி நடத்தியுள்ளனர். 

 

இந்த தடியடி சம்பவத்தை தொடர்ந்து சில இடங்களில் மோதல் சம்பவம் அதிகரித்த நிலையில் இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி நட்சத்திர ஹோட்டலில் 6 மாதங்கள் தங்கிய பெண் கைது.. பாகிஸ்தானில் இருந்து பெரிய தொகை வந்ததா?

திருமணமான தாய்மாமா மகளை உறவுக்கு அழைத்த இளைஞர்.. சம்மதிக்காததால் துப்பாக்கியால் சுட்டு கொலை..!

கோவாவில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலை.. பிரதமர் மோடி திறக்கிறார்..!

செங்கோட்டையன் இணைவு!.. தவெகவுக்கு என்ன லாபம்?.. அதிமுகவுக்கு என்ன நஷ்டம்?...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்