ஓடும் ஆம்புலன்ஸில் சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை .. ம.பியில் அதிர்ச்சி சம்பவம்..!

Siva
வெள்ளி, 29 நவம்பர் 2024 (11:33 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் ஓடும் ஆம்புலன்சில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் சேவை கிராமங்கள் முதல் நகரங்கள் வரை செயல்பட்டு வரும் நிலையில் அம்மாநிலத்தில் உள்ள ஹனுமனா என்ற தாலுகாவில் ஓடும் ஆம்புலன்சில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் தேதி ஆம்புலன்ஸில் வந்த இருவர் தன்னை வலுக்கட்டாயமாக கடத்தி சென்று ஓடும் ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இது குறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் வீரேந்திர சதுர்வேதி மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் ஆகிய இருவரையும் காவல்துறை கைது செய்து விசாரணை செய்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி..!

500 இண்டிகோ விமானங்கள் ரத்தானதால் பயணிகள் ஆத்திரம்.. ஏர் இந்தியா விமானத்தை மறித்து போராட்டம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் நாடாளுமன்றத்தில் ஒலிக்குமா? திமுக நோட்டீஸ்

தவெகவில் இணைந்தாலும் ஜெயலலிதாவை மறக்காத செங்கோட்டையன்.. நினைவு நாள் பதிவு..!

மோடி இந்தியாவுக்கு கிடைத்திருப்பது இந்தியர்களின் அதிர்ஷ்டம்: புதின் புகழாரம்..!

அடுத்த கட்டுரையில்