Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண் ஒடும் காரில் வைத்து பலாத்காரம்

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2016 (18:09 IST)
பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த இளம்பெண் ஒருவர் உள்துறை அமைச்சகத்தின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

நொய்டாவை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வேலை தேடுவதற்காக புதனன்று புதுடெல்லி சென்றுள்ளார். பின்னர் அவர் வீட்டிற்கு செல்வதற்காக எய்ம்ஸ் மருத்துவமனை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இரவு 9 மணியளவில் டாக்சிக்காக காத்திருந்த போது, அங்கு வந்த கார் ஒன்று அவரிடம் நின்றுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த அந்த காரின் ஓட்டுநர், அந்த பெண்ணிடம் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண் காரில் ஏறியவுடன், கார் நொய்டாவை நோக்கி சென்றுள்ளது.

அப்போது மோதிபாக் பகுதியை அடைந்தவுடன் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிருத்திய ஓட்டுநர், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அங்கிருந்த தப்பித்த அந்த பெண், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர்களிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

உடனடியாக காவலர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இதையடுத்து காரின் ஓட்டுநரை கைது செய்ததுடன் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?

வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம்! - நீதிமன்றம் உத்தரவு!

பாமகவில் வெடித்த மோதல்? மேடையிலேயே ராமதாஸ் - அன்புமணி வாக்குவாதம்! - என்ன நடந்தது?

இன்றைக்கும்.. என்றைக்கும்.. நீ எங்கள் நெஞ்சத்தில்..! - கேப்டன் விஜயகாந்திற்கு மு.க.ஸ்டாலின், கமல், ரஜினி நினைவஞ்சலி!

மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடக்கம்! - பின் தொடரும் காங்கிரஸ் பிரமுகர்கள்!

அடுத்த கட்டுரையில்