Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் ஜெயலலிதாவுக்கு சிலை

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2016 (17:19 IST)
ஜெயலலிதா மறைவுக்கு பின் தஞ்சையில் கோயில் கட்டப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து புதுச்சேரியில் முதன் முறையாக இன்று ஜெயலலிதாவின் முழு திருஉருவச்சிலை திறக்கப்பட்டுள்ளது. 
 


 


கடந்த 5ஆம் தேதி ஜெயலலித மறைந்த பின் அம்மா ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று எல்லோராலும் பேசப்பட்டது.
 
இந்நிலையில் ஜெயலலிதாவின் நினைவாக தஞ்சையில் உள்ள அதிமுக தொண்டர் ஒருவர், அங்கு கோயில் கட்டியுள்ளார். அதைத்தொடர்ந்து புதுச்சேரியில் முதன்முதலாக ஜெயலலிதாவின் முழு திருஉருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.
 
திருக்கனூர் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் டி.என்.நாசர், ஜெயலலிதாவின் சிலையை வைத்தார். அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் இல்லாமல் இந்த சிலை திறக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அதிமுக சார்பில் மறைந்த ஜெயலலிதாவுக்கு சிலை வைக்கக்கோரி முதல்வர் நாராயணசாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டதாகவும், அதை அவர் பரிசீலிப்பதாக உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments