ஜார்கண்ட் மாநிலத்தில் 17 வயது சிறுமி ஒருவர் தெருவில் குழந்தை பெற்ற சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். காதலினால் நெருக்கம் அதிகமாகி சிறுமி கர்ப்பமானாள். இதை காதலனிடம் கூறிய பின்னர், அவன் அந்த சிறுமியை கைவிட்டுவிட்டான்.
சிறுமியின் குடும்பத்தினருக்கு இந்த விஷயம் தெரியவர அவளது பெற்றோர் இதை அவமானமாக கருதி அந்த சிறுமியை வீட்டை விட்டு வெளியே துரத்தினர்.
இதனால் இருக்க இடமின்றி சுமார் 4 மாதங்கள் அந்த சிறுமி தெருவிலும் சாலையிலும் வசித்துள்ளார். நாளடைவில் பிரசவம் நெருங்கியதால் அருகில் இருக்கும் சுகாதார மையத்திற்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார்.
ஆனால் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் சிறுமியை சுகாதார நிலையத்தில் அனுமதிக்க மறுத்தனர். இதனால் அந்த சிறுமி தெருவிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
பின்னர் வழிபோக்கர் ஒருவர் தொப்புள் கொடி கூட வெட்டப்படாமல் இருந்த தாயையும் குழந்தையையும் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.