டெல்லி ஜகத்புரி பகுதியை சேர்ந்த சேர்ந்த பள்ளி ஒன்றில் 17 வயது மாணவி ஒருவரை மாணவரும், அந்த பள்ளியின் காவலாளியும் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த மாணவி, தன் செலவுகளை தானே கவனித்துக்கொள்ள ஒரு பகுதி நேர வேலை தேடித்தர முடியுமா? என தனது நண்பர்களிடம் கேட்டுள்ளார். அவர்கள் அந்த மாணவியை பள்ளி வளாகத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு வரச் சொல்லி இந்த பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் அந்த பள்ளியின் காவலாளியும் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. நடந்த சம்பவத்தை அந்த மாணவி தன் தாயிடம் கூறியுள்ளார். அவர் உடனடியாக காவல் துறையிடம் புகார் அளிக்க இந்த சம்பவம் குறித்து வெளியுலகத்துக்கு தெரியவந்துள்ளது.
காவல் துறையினர் இந்த பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர். பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.