தாய் மாமாவால் தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்ட 10-ஆம் வகுப்பு மாணவி!
தாய் மாமாவால் தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்ட 10-ஆம் வகுப்பு மாணவி!
ஹரியானா மாநிலம் ஜிண்ட் பகுதியில் 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
கைதல் அருகில் உள்ள டயோர ஹுரனா பகுதியில் தன் தாய் மாமா உடன் வசித்து வந்த அந்த சிறுமி அவரால் பலமுறை தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளார் என சதார் காவல் நிலைய துணை காவல் கண்காணிப்பாளர் சிங் கூறியுள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன்னர் அந்த சிறுமி தன்னுடையா மாமா தன்னை தொடர்ந்து பலாத்காரம் செய்து வருகிறார் என மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார், ஆனால் ஊர் பஞ்சாயத்தில் இந்த விவகாரத்தில் சுமூக முடிவு எடுக்க அவர்கள் வற்புறுத்துவதாக சிங் கூறியுள்ளார்.
இருந்த போதிலும் அவளது மாமா தொடர்ந்து பலாத்காரம் செய்து சிறுமியை கொலை செய்யவும் முயன்றுள்ளார்.
இதனையடுத்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு விஷம் அருந்தி விட்டு தற்கொலைக்கு முயன்ற அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபாத்தான நிலையில் உள்ளார்.
தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த டிஎஸ்பி, மகளிர் காவல் நிலைய பொறுப்பாளர் சந்தோஷ் சிங் சிறுமியின் வாக்குமூலத்தை பெற்று அவளது தாய் மாமா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.