அமேசான் நிறுவனத்திலிருந்து பரிசு கூப்பன் வந்திருப்பதாக நூதன மோசடி நடைபெற்று வருவதாக போலீசார் எச்சரித்துள்ளனர்.
அமேசான் நிறுவனம் உள்பட பெரிய நிறுவனங்களிடமிருந்து பரிசு பொருள்களின் கூப்பன் வந்திருப்பதாக வீட்டிற்கு கடிதம் வரும். அந்த கடிதத்தைப் பிரித்து பார்த்தால் அதில் ஒரு கியூஆர் கோடு இருக்கும் என்றும் அந்த கியூஆர் கோடை ஸ்கேன் செய்தால் அதில் உள்ள நம்பருக்கு கால் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
நீங்கள் அந்த நம்பருக்கு கால் செய்தால் உங்களுக்கு மிகப்பெரிய பரிசு கிடைத்திர்ப்பதாக எதிர்முனையில் ஒருவர் பேசுவார். ஆனால் வரி உள்ளிட்ட ஒரு சில கட்டணங்களுக்காக சில ஆயிரங்களை அனுப்ப வேண்டும் என்று அவர் முதலில் கூறுவார். அந்த பணத்தை பெற்றுக்கொண்டவுடன் வேறு சில காரணங்களை கூறி அதற்கும் பணம் அனுப்ப வேண்டும் என்றும் அதன் பிறகு உங்கள் வீட்டிற்கு அந்த மிகப்பெரிய பரிசு பொருள் வந்துவிடும் என்று ஏமாற்றுவார்கள்.
ஆனால் உங்கள் வீட்டிற்கு எந்த பரிசு பொருளும் வராது என்றும் ஒரு குறிப்பிட்ட பணத்தை சுரண்டியவுடன் அவர்கள் எஸ்கேப் ஆகி விடுவார்கள் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். எனவே அமேசான் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களிடம் இருந்து பரிசு கூப்பன் வந்திருப்பதாக அறிந்தால் உடனடியாக காவல்துறையை அணுக வேண்டும் என்றும் அவரை அறிவுறுத்தப்பட்டுள்ளது.