தொடர்ந்து ஏறுமுகத்தில் போய்க் கொண்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை தற்போது குறைந்துள்ளது.
இந்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயுக்களை வழங்கி வருகிறது. ஆனால் சர்வதேச அளவில் தொடர்ந்து உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் போல கேஸ் சிலிண்டர்களின் விலையும் கடந்த ஆறு மாதங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 15 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ள சிலிண்டர் விலை தற்போது முதல் முறையாக குறைந்துள்ளது.
மானிய சிலிண்டர்களுக்கான விலைக்குறைப்பு ரூ 6.52 ஆகவும் மானியமில்லா சிலிண்டர்களின் விலைக் குறைப்பு 133 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்புகள் இன்று நள்ளிரவு முதல் இன்று முதல் அமலுக்கு வருகின்றது. இந்த செய்திகள் பொதுமக்கள் மத்தியிலும் குடும்பபெண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இன்றைய நிலவரப்படி மானிய சிலிண்டர் 500.90 ரூபாய்க்கும் மானியமில்ல சிலிண்டர் 809.50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.