Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டில் சிலிண்டர் விலை குறைப்பு – மக்கள் மகிழ்ச்சி…

Webdunia
செவ்வாய், 1 ஜனவரி 2019 (08:22 IST)
தொடர்ந்து உயர்ந்து வந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை முன்னிட்டு விலைக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயுக்களை வழங்கி வருகிறது. ஆனால் சர்வதேச அளவில் தொடர்ந்து உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் போல கேஸ் சிலிண்டர்களின் விலையும் கடந்த ஆறு மாதங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து உயர்ந்து வந்த கேஸ் சிலிண்டர்களின் விலை நேற்று விலைக் குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலையை நிர்னயம் செய்யும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜனவரி 1 முதல் மானியமல்லாத சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை 120.50 ரூபாயும், மானிய சிலிண்டரின் விலை 5.91 ரூபாயும் குறைக்கப்படுகிறது’ என்று அறிவித்துள்ளது.இந்த விலைக் குறைப்பிற்கு சர்வதேச அளவில் எரிவாயுக்களின் விலை வீழ்ச்சி மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு போன்றவைக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

இந்த விலைக் குறைப்பின் மூலம் மானிய விலையில் வழங்கப்படும் எரிவாயு சிலிண்டரின் விலை 500.90 ரூபாயில் இருந்து 494.99 ரூபாயாகவும், மானியமல்லாத சிலிண்டரின் விலை 809.5 ரூபாயில் இருந்து 689 ரூபாயாகவும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பூமியை நோக்கி வருவது விண்கல் இல்லை.. ஏலியன் விண்கலம்? - அதிர்ச்சி கிளப்பும் விஞ்ஞானிகள்!

தேனி கூலி தொழிலாளி வங்கிக்கணக்கில் திடீரென வந்த ரூ.1 கோடி.. வருமான வரித்துறையினர் விசாரணை..

முக ஸ்டாலின் - பிரேமலதா திடீர் சந்திப்பு.. திமுக கூட்டணியில் இணைகிறதா தேமுதிக?

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்தது வரலாற்றுப் புரட்சி: ஓபிஎஸ் அதிரடி அறிக்கை..!

6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை! நாளை முதல் 25% வரியா?

அடுத்த கட்டுரையில்
Show comments