ராஜஸ்தானில் காந்தி சிலை மர்ம நபர்களால் சேதம்

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2018 (16:01 IST)
ராஜஸ்தானில் மர்ம நபர்கள் சிலர் காந்தியின் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியாவில் தலைவர்களின் சிலைகளை மர்ம நபர்கள் சேதப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் திரிபுரா மாநிலத்தில் நடந்த தேர்தலில் பாஜக ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து அங்கு லெனின் சிலை அகற்றப்பட்டது. இதன் எதிரொலியாக இந்தியா முழுவதும் பெரியார் சிலை, காந்தி சிலை, அம்பேத்கர் சிலை உள்ளிட்ட சிலைகள் மர்ம நபர்களால் சேதபடுத்தப்பட்டது.
 
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராஜ்சம்ந்த் மாவட்டத்தில் காந்திஜி சிலையின் தலை பகுதியை சில மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் கேரளாவில் காந்தி சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோடையன் ஊரில் மீட்டிங்!.. நம்ம கோட்டைன்னு காட்டணும்!.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட பழனிச்சாமி!...

டிட்வா புயல்: சென்னை மாநகராட்சியின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!.. கோவையில் அதிர்ச்சி!....

ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

ஆபத்தை உணராமல் மெரினாவில் குறைந்த பொதுமக்கள்.. போலீசார் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments