எல்லாம் அந்த கடவுள் பண்ற வேல; என்ன பண்றது? – அப்செட்டான நிதியமைச்சர்!

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (08:16 IST)
நேற்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு தொழில்துறை நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ள நிலையில், நேற்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன் ”இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடவுளின் செயல். இந்த ஆண்டில் ஜி.எஸ்.டி வசூல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. முன் எப்போதும் இல்லாத அபூர்வமான சூழல் உருவாகியுள்ளது” என கூறியுள்ளார்.

மேலும் இந்த நிதி ஆண்டில் ஜிஎஸ்டி இழப்பீடாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் கோடி வழங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments