இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருவதால் அம்மாநில அரசு ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு நேர ஊரடங்கும், சனி ஞாயிறு முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது நாள் முழுவதும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்த அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
இருப்பினும் மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது நவராத்திரி உள்ளிட்ட திருவிழாக்கள் தொடங்கி உள்ளதால் இந்த திருவிழா முடிந்த பிறகு ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது
எனவே ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு மகாராஷ்டிர மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இருப்பினும் 8 முதல் 15 அவர்களுக்கு மட்டுமே இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 63 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் 349 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது