Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 25 March 2025
webdunia

நாளை முதல் 4 நாட்கள் வங்கி விடுமுறை.. பொதுமக்கள் தயாராக வலியுறுத்தல்..!

Advertiesment
நாளை முதல் 4 நாட்கள் வங்கி விடுமுறை.. பொதுமக்கள் தயாராக வலியுறுத்தல்..!

Mahendran

, புதன், 24 ஜனவரி 2024 (15:11 IST)
நாளை முதல் தைப்பூசம், குடியரசு தினம் மற்றும் சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வர இருப்பதை அடுத்து பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்கி பணிகளை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  
 
ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா தினத்தில் தமிழகத்தில் அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்ததே. இதனை அடுத்து நாளை தைப்பூசம் என்பதால் விடுமுறை நாளாகும். அதேபோல் ஜனவரி 26 ஆம் தேதி  வெள்ளிக்கிழமை குடியரசு தினம் என்பதால் அன்றைய தினமும்  வங்கிகளுக்கு விடுமுறை. 
 
மேலும் ஜனவரி 27ஆம் தேதி  நான்காவது சனி என்பதால் அன்றும் அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகள் விடுமுறை நாளாகும். எனவே தொடர்ச்சியாக வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் வங்கி விடுமுறை என்பதால் பொதுமக்கள் முக்கிய பணிகளை முன்கூட்டியே முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
 
வங்கி விடுமுறை என்றாலும்  மொபைல் செயலிகள் மற்றும் ஆன்லைன் சேவைகள் வழக்கம் போல இயங்கும் என்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பொதுமக்கள் மேற்கொள்ளலாம். அதேபோல் போதுமான அளவிற்கு ஏடிஎமில் பணம் நிரப்ப வழிவகை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது,
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மம்தா இல்லாத இந்தியா கூட்டணியை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது: காங்கிரஸ்