கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மாநிலத்தின் பெரும்பகுதிகளில் சாலை மற்றும் இருப்புப்பாதை சேதமடைந்துள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கொச்சி விமான நிலையத்திற்குள் வெள்ள நீர் புகுந்ததால் விமான சேவையும் சமீபத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் கேரளாவுக்கு சென்ற மற்ற மாநில மக்கள் அம்மாநிலத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தனர்.
இந்த நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொச்சி விமானநிலையம் சீரடையும் வரை கொச்சியிலுள்ள கடற்படை விமான ஓடுதளம் பயணிகள் விமான சேவைக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் கொச்சியில் இருந்து விமான சேவை இயக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.