Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் 1 முதல் 200 பயணிகள் ரயில்கள்: அட்டவணையை வெளியிட்ட ரயில்வே துறை

Webdunia
வியாழன், 21 மே 2020 (06:31 IST)
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதன் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் அனைத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டன. குறிப்பாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் எந்த ரெயில்களும் ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நான்காம் கட்ட போராட்டத்தின் போது மட்டும் மத்திய அரசுக்கு சில தளர்வுகளை ஏற்படுத்தி வெளிமாநில தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்களை இயக்கியது. இந்த ரயில்கள் மூலம் ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த மாநிலத்திற்கு சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது ஜூன் 1-ஆம் தேதி முதல் 200 ரயில்களை இயக்க போவதாக இந்தியன் ரயில்வேயை அறிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதனை அடுத்து தற்போது இந்த ரயில்களுக்கான அட்டவணையை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 10 மணி முதல் தொடங்கும் என்று ரயில்வேதுறை அறிவித்துள்ளது
 
பயணிகள் தங்களுக்கு தேவையான பயண டிக்கெட்டுக்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. இந்த 200 ரயில்கள் மூலம் வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் சொந்த மாநிலத்துக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments