அயோத்தி ராமர் கோவிலில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவது எப்போது? முக்கிய தகவல்..!

Siva
செவ்வாய், 16 ஜனவரி 2024 (08:30 IST)
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட பிரமாண்டமான ராமர் கோயிலில் ஜனவரி 23ம் தேதி முதல் பொதுமக்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட பிரமாண்டமான ராமர் கோயில்  ஜனவரி 22ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது.  இதில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
 
இந்த நிலையில் குடமுழுக்கு விழா முடிந்த மறுநாள் ஜனவரி 23ம் தேதி முதல் பொதுமக்கள் ராமர் கோயிலுக்குள் சென்று ஸ்ரீ ராமரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், தரிசனத்துக்கு வரும் அனைவரும் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், கோயிலுக்குள் செல்லும் போது அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

ALSO READ: அயோத்தி ராமர் கோவிலுக்கு ஒருநாள் கட்டாயம் வருவேன் என துர்கா ஸ்டாலின் கூறினாரா?
 
அயோத்தி ராமர் கோயில் தரிசன நேரம் தினசரி  காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பூம்புகாரில் கடலுக்கு அடியில் கட்டிடங்கள்.. ஒரு வணிக நகரமே இருப்பது கண்டுபிடிப்பு..!

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? டெல்லியில் யுபிஎஸ்சி ஆலோசனை.. இன்று இறுதி செய்ய வாய்ப்பு..!

பெண்ணை தூக்கி தீ மிதிக்க சென்ற முதியவர்.. இருவரும் விழுந்து படுகாயம்.. அதிர்ச்சி தகவல்..!

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை கூடாது.. மீறினால் நடவடிக்கை: எச்சரிக்கை சுற்றறிக்கை

எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் தெரியவில்லை, நாங்கள் சொல்லி கொடுக்க தயார்: செல்வப்பெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments