Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உபியில் தொடரும் அவலம்: மனைவியன் சடலத்தை தோளில் சுமந்து சென்ற கணவர்

Advertiesment
உபியில் தொடரும் அவலம்: மனைவியன் சடலத்தை தோளில் சுமந்து சென்ற கணவர்
, செவ்வாய், 8 மே 2018 (17:54 IST)
உத்தரபிரேதசத்தில் அம்புலன்ஸ் இல்லாததால் இறந்தவர்களின் உடலை தூக்கிச் செல்லும் அவலம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

 
 
உபியில் ஆம்புலன்ஸ் வாகனம் வழங்காததால் இறந்த மனைவியின் உடலை கணவர் தோளில் சுமந்து சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. படூன் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் நேற்று திடீரென உயிரிழந்தார்.
webdunia
 
இந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அந்த பெண்ணின் கணவருக்கு ஆம்புலன்ஸ் தர மறுத்துள்ளது. இதனால் அவர் தனது தோளில் இறந்த மனைவியை சுமந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற டெம்போ ஓட்டுனரிடம் தன்னை தனது வீட்டில் இறக்கிவிடும் படி கெஞ்சிய காட்சிகள் காண்போர் நெஞ்சங்களை பதைபதைக்க வைக்கிறது. 
 
இச்சம்பவம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானது, இதை அடுத்து அம்மருத்துவமனையின் நிர்வாகம் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே உத்தரபிரேதசத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனிமேல் வண்டலூர் ஜூ போக வேண்டிய அவசியமில்லை: ஏன் தெரியுமா?