Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கட்டிப்பிடித்தது குத்தமா? நொறுங்கிய விலா எலும்பு

கட்டிப்பிடித்தது குத்தமா? நொறுங்கிய விலா எலும்பு
, புதன், 22 மார்ச் 2017 (15:38 IST)
நண்பர் ஒருவர் தனது சக நண்பரை கட்டி பிடித்த போது அவரது விலா எலும்பு நொறுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மதுகர் ஹைக்வாட் மற்றும் அமித் பாட்வே ஆகிய இருவரும் மருத்துவ கல்லூரியில் ஒன்றாக இணைந்து படித்துள்ளனர். படிப்பு முடிந்த பின் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் இருவரும் நீண்ட நாள் இடைவெளிக்கு பின் சந்தித்துள்ளனர். 
 
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவருக்கொருவர் சந்திப்பதால், இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டனர். இதில், ஹைக்வாட்-க்கு மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
 
இதுகுறித்து ஹைக்வாட் கூறியதாவது:-
 
நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது நண்பரை சந்தித்த மகிழ்ச்சியில் உட்கார்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்திருப்பதற்குள் உடனே வந்து என்னை கட்டிப்பிடித்துவிட்டார். இதில் எனக்கு மூன்று இடங்களில் விலா எலும்பு நொறிங்கிவிட்டது. இதனால், தொடர்ந்து 15 நாட்களுக்கு மருத்துமனையில் ஓய்வு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, என கூறியுள்ளார்.
 
நண்பர்கள் மகிழிச்சியில் கட்டிப்பிடித்துக் கொண்டது விலா எலும்பு முறிவில் முடிந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிஎஸ் அணிக்கு டிமிக்கி கொடுத்த வக்கீல்: சதி செய்த தினகரன் தரப்பு!