சல்மான் கான் வீடு புகுந்து கொலை செய்வோம்.. மீண்டும் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்..!

Mahendran
திங்கள், 14 ஏப்ரல் 2025 (11:28 IST)
பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீடு புகுந்து அவரை கொலை செய்வோம் என மர்ம நபர்கள் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து, மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே சில முறை சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ள நிலையில், அவருக்கு மத்திய அரசு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சல்மான் கான் அவரது வீட்டிலேயே கொலை செய்து, அவரின் வாகனங்களை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மகாராஷ்டிரா அரசு போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணுக்கு மிரட்டல் செய்தி வந்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 1998 ஆம் ஆண்டு, ராஜஸ்தானில் படப்பிடிப்புக்கு சென்ற சல்மான் கான் மான்களை வேட்டையாடியதாக கூறப்பட்ட நிலையில், இந்த வழக்கில் அவர் ஜாமீன் பெற்றிருந்தார்.

இந்த நிலையில், பிஷ்னோய் சமூகத்தை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் என்பவர் சல்மான்கானுக்கு பலமுறை வெளிப்படையாகவே கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரிவினர் தான் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்தார்களா என்பது தொடர்பாக, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

அடுத்த கட்டுரையில்
Show comments