Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்ஸ்டாவில் ஃபாலோயர்ஸை அதிகரிப்பதாகக் கூறி சிறுமியிடம் ரூ.55 ஆயிரம் பணம் மோசடி!

Advertiesment
abuse
, வியாழன், 9 மார்ச் 2023 (15:39 IST)
மும்பையில்  இன்ஸ்டாவில் ஃபாலோயர்ஸை அதிகரிப்பதாகக் கூறி ரூ.55000 பணத்தை சிறுமியிடம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக ஆன்லைனில் பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரிடம் பணமோசடி அதிகரித்துள்ளது.

சில தினங்களுக்கு முன் பிரபல  நடிகை ஸ்வேதா மேனனிடம் மர்ம நபர்கள் வங்கி விவங்களைப் பெற்றுக்கொண்டு, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 50,000 க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்தனர்.

இதுகுறித்து, காவல்துறை வழக்குப் பதிவு விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று மும்பையில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இன்ஸ்டாவில்,  ஃபாலோயர்ஸ்களை அதிகரிப்பதாகக் கூறி 16 வயது சிறுமியிடம் ரூ.55,000 பணத்தை மோசடி செய்துள்ளனர்.

அவரது வங்கிக் கணக்கில் இருந்து மொத்தப் பணத்தை எடுத்ததால், சிறுமி அவரது தந்தையிடம் கூறியுள்ளார். அவர் போலீஸில் சென்று புகாரளித்துள்ளார்.  இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார்ல் யுபியை ஐடியை வைத்து விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் மனைவி ஜெயலலிதாவை விட 1000 மடங்கு பவர்ஃபுல்: அண்ணாமலை