Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லல்லு பிரசாத் மகனை திருமணம் செய்ய வாட்ஸ் அப்பில் 44 ஆயிரம் பெண்கள் விருப்பம்

லல்லு பிரசாத் மகனை திருமணம் செய்ய வாட்ஸ் அப்பில் 44 ஆயிரம் பெண்கள் விருப்பம்

Advertiesment
லல்லு பிரசாத் மகனை திருமணம் செய்ய வாட்ஸ் அப்பில் 44 ஆயிரம் பெண்கள் விருப்பம்
, வெள்ளி, 21 அக்டோபர் 2016 (17:53 IST)
பீகாரின் துணை முதல்வரும், லல்லு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவை(26), திருமணம் செய்ய 44 ஆயிரம் பெண்கள் வாட்ஸ் அப்பில் விருப்பம் தெரிவித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பீகாரில் நிதிஷ்குமார் முதலமைச்சராக உள்ளார். பீகார் முன்னாள்  முதலமைச்சரான லல்லு பிரசாத் மகனுமான தேஜஸ்வி யாதவ் துணை முதல் அமைச்சராக உள்ளார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
 
இந்நிலையில், சாலைப் பழுது தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் ஒரு வாட்ஸ் அப் எண்ணை தேஜஸ்வி சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.
 
அந்த எண்ணுக்கு ஏராளமான தகவல்கள் குவிந்துள்ளன. அந்த தகவல்களை அவர் ஆராய்ந்த போது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் 3 ஆயிரம் தகவல்கள் மட்டுமே சாலை பழுது தொடர்பான புகார்களாக இருந்தன. இதர 44 ஆயிரம்  தகவல், அவரை திருமணம் செய்து விருப்பம் தெரிவித்து இளம்பெண்களிடம் இருந்து வந்தவையாக இருந்தன. அதிலும், பல பெண்கள் தங்களின் நிறம், உள்ளிட்ட விவரங்களை தெரிவித்திருந்தனர். 
 
அவர்கள் அனைவரும், அந்த வாட்ஸ்-அப் எண், தேஜஸ்வியின் சொந்த எண் என நினைத்து தங்களின் விருப்பங்களை தெரிவித்துள்ளார்கள் என்று தெரிகிறது. 
 
இதுபற்றி கருத்து தெரிவித்த தேஜஸ்வி “நல்ல வேளை எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இல்லையெனில் இந்த விவகாரம் பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கும்” என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வைகோ மீது திமுக தொடர்ந்த தேச துரோக வழக்கு - விடுவித்தது நீதிமன்றம்