Publish Date: Tue, 04 Jul 2023 (15:42 IST)
Updated Date: Tue, 04 Jul 2023 (15:44 IST)
நான்கு மாநிலத்தில் உள்ள பாஜக தலைவர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் பாஜக தலைவராக அண்ணாமலை தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில மாநிலங்களின் பாஜக தலைவர்கள் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது தெலுங்கானா, ஆந்திரா, ஜார்கண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய நான்கு மாநில பாஜக தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பாஜக மேலிடம் அறிவித்துள்ளது.
இதுகுறித்த முழு விபரங்கள் இதோ:
1. தெலங்கானா மாநில பாஜக தலைவராக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமனம்;
2. ஆந்திரப் பிரதேச மாநில பாஜக தலைவராக புரந்தேஸ்வரி நியமனம்;
3. ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவராக பாபுலால் மாரன்டி நியமனம்;
4. பஞ்சாப் மாநில பாஜக தலைவராக சுனில் ஜாகர் நியமனம்