Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான விபத்தில் சிக்கிய முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார்.. அதிர்ச்சி தகவல்..!

Mahendran
வியாழன், 12 ஜூன் 2025 (17:28 IST)
அகமதாபாத் அருகே ஏற்பட்ட ஏர் இந்தியா AI171 விமான விபத்தில், 2016 முதல் 2021 வரை குஜராத் மாநிலத்தின் 16வது முதலமைச்சராக பதவியிலிருந்த பாஜக தலைவரும் ஆன விஜய் ரூபாணி  உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. அவருக்கு வயது 68
 
குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி உள்ளிட்ட 242 பேருடன் புறப்பட்ட போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களில் மேகானி நகர் பகுதியில் வீடுகள் அடங்கிய பகுதியில் விழுந்தது. அப்போது  பயஙக்ர சத்தம் மற்றும் கருப்பு புகை மேலெழுந்ததாக கண்கூடான சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.
 
விமானத்தை கேப்டன் சுமித் சபர்வால் மற்றும் துணை இயக்குநர் கிளைவ் குந்தர் இயக்கினர். உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்ந்துகொண்டிருக்கின்ற நிலையில், ரூபாணியின் பெயர் பயணிகள் பட்டியலில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
2009ல் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியும், 2011ல் அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜி கண்டுவும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் இன்று குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி உயரிழந்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற சாமியாருக்கு 40 நாட்கள் பரோல்.. இது 14வது முறை..!

ராமர், சீதை, காகம் பெயர்களில் இருப்பிட சான்றிதழ்.. பீகாரில் அரசு நிர்வாகத்தின் அலட்சியம்..!

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments