முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2019 (09:45 IST)
முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 88.  கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று சிகிச்சையின் பலனின்றி காலமானார் . ஜார்ஜ் பெர்ண்டாஸ் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த போது தான் கார்கில் போர் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1967 ஆம் ஆண்டில் முதல்முறையாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற  ஜார்ஜ் பெர்னாண்டஸ் அதன்பின்னர் கடந்த 1977, 1980, 1989, 1991, 1996, 1998, 1999, 2004 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் வெற்றி பெற்று மொத்தம் ஒன்பது முறை எம்பியாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2004ஆம் ஆண்டுக்கு பின்னர் அரசியலில் இருந்து ஒய்வு பெற்ற ஜார்ஜ் பெர்னாண்டஸ் கடந்த சில ஆண்டுகளாக அல்சைமர் நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் இன்று அவர் காலமானார். மறைந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களுக்கு அனைத்து கட்சி தலைவர்கல் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments