Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாக்டோ ஜியோ போராட்டம்: வேலூரில் ஏமாற்றம் அடைந்த மு.க.ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2019 (09:13 IST)
ஜாக்டோ ஜியோ அமைப்பினர்களின் வேலைநிறுத்த போராட்டம் கடந்த ஒரு வாரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் வேலூரில் இன்று நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவு தர வருகை தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏமாற்றம் அடைந்தார்.

வேலூர் அருகே உள்ள சீவூரில் தி.மு.க ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வேலூர் வந்தார். இந்த நிலையில் இன்று காலை வேலூரில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக வளாகத்திற்கு மு.க.ஸ்டாலின் வருவதாக போலீசார்களுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சுதாரித்த போலீஸார் மு.க.ஸ்டாலின் வருவதற்கு முன்னரே போராட்டம் செய்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவரையும் கைது செய்து அழைத்து சென்றனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க முக ஸ்டாலின் வந்தபோது அங்கு யாருமே இல்லாததால் அவர் ஏமாற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டது கூட தெரியாமல் தன்னை அழைத்து வந்த வேலூர் திமுக நிர்வாகிகளை ஸ்டாலின் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக எதிர்க்கட்சியாக கூட வராது: பிரபல அரசியல் விமர்சகர் கணிப்பு..!

விஜய் செல்லும் இடத்திற்கு முன்கூட்டியே செல்லும் திமுக.. அவ்வளவு பயமா?

அன்புமணியை அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன்! - ராமதாஸ் பேச்சால் பாமக அதிர்ச்சி!

மதுரை மேயர் இந்திராணியின் கணவர் திமுகவில் இருந்து நீக்கம்.. பிடிஆரின் தீவிர ஆதரவாளரா?

பிரதமர் மோடியின் சிக்கிம் பயணம் கடைசி நிமிடத்தில் ரத்து.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments